யாழில் இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 1, 2021

யாழில் இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன

கொவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் எதிர்பார்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 60 சதவீதமானோர் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட் - 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 83 கிராம அலுவலகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு கிராம அலுவலர் பிரிவு ரீதியாக 11 கிராம அலுவலகர் பிரிவுகளில் நேற்று கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று 10 ஆயிரத்து 52 பேருக்கு தடுப்பூசி மருந்து வழங்க எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 6 ஆயிரத்து 72 பேர் இன்று தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 60 சதவீதமானோர்.

தெரிவு செய்யப்பட்ட 29 கிராம அலுவலகர் பிரிவுகளில் 17 நிலையங்களில் இன்று தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad