யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் ஒரேநாளில் மூவர் உயிரிழப்பு! - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 1, 2021

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் ஒரேநாளில் மூவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் நேற்று (திங்கட்கிழமை) மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் உள்பட மூவரே உயிரிழந்துள்ளனர்

கொழும்புத் துறையைச் சேர்ந்த 69 வயதடைய ஒருவர் தனது வீட்டில் மயக்கமுற்ற நிலையில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல், நெடுத்தீவைச் சேர்ந்த 70 வயதான முதியவர் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், காரைநகரைச் சேர்ந்த 45 வயதான ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 43ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad