176 கடலாமைகள் உள்ளிட்ட 200 கடலுயிர்கள் கரையொதுங்கின : சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

176 கடலாமைகள் உள்ளிட்ட 200 கடலுயிர்கள் கரையொதுங்கின : சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவிப்பு

MV X-Press Pearl கப்பல் தீப்பிடித்து எரிந்து கடலுக்கு மூழ்கிய சம்பவத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளால், இதுவரை 200 கடல் வாழ் உயிர்கள் இறந்து கரையொதுங்கியுள்ளதாக, சட்டமா அதிபர் திணைகள்ளம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய, 176 கடலாமைகள், 20 டொல்பின்கள், 4 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

கடந்த மே 20ஆம் திகதி திடீரென தீ பரவலுக்குள்ளான MV X-Press Pearl கப்பல், இலங்கையின் கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் வைத்து பாரிய தீ அனர்த்தத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து அது கடலில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment