சினோபார்ம் தடுப்பூசி விநியோகம் இன்று முதல் ஆரம்பம் - WHO, NMRA அனுமதியைத் தொடர்ந்து நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

சினோபார்ம் தடுப்பூசி விநியோகம் இன்று முதல் ஆரம்பம் - WHO, NMRA அனுமதியைத் தொடர்ந்து நடவடிக்கை

சீன தயாரிப்பு கொவிட்-19 சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசி விநியோகம் இன்று (08) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்தில் வழங்கி வைக்கப்பட்டு அது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

குறித்த தடுப்பூசியை உலகளாவிய ரீதியில் வழங்குவதற்கான அனுமதியை, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) நேற்று (07) வழங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து இலங்கையில், சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனை இலங்கை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவினால் கடந்த மார்ச் 31ஆம் திகதி, இலங்கைக்கு 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள், அன்பளிப்பு செய்யப்பட்டதோடு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதனை சீனத் தூதுவரிடமிருந்து உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment