கிளிநொச்சி வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக் கைதி தப்பி ஓட்டம்! - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

கிளிநொச்சி வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக் கைதி தப்பி ஓட்டம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் நெஞ்சுவலி என்று தெரிவித்து அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று புதன்கிழமை காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளி மாவட்டம் ஒன்றைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார்.

தனக்கு கடும் நெஞ்சுவலி என்று அவர் தெரிவித்ததன் அடிப்படையில் நேற்றையதினம் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை கிளிநொச்சிப் பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad