யாழில் ட்ரோன் கெமராவிடம் சிக்கிய 10 பேர் கைது! - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

யாழில் ட்ரோன் கெமராவிடம் சிக்கிய 10 பேர் கைது!

யாழில் ட்ரோன் கெமரா கண்காணிப்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழில் இன்றையதினம் விமானப்படை மற்றும் யாழ்ப்பாண பொலிசார் இணைந்து ரோன் கமரா பயன்படுத்தி யாழ் நகரப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்ததில் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்.

இன்று (26) காலை யாழ் நகரம் நல்லூர், அரியாலை, குருநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கெமரா கண்காணிப்பின் போதே 10 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் எச்சரிக்கை செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாது வீதியில் நின்றமை, பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணித்த போன்ற குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad