சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்து யாழில் தங்கியிருந்த இந்திய குடும்பஸ்தினர் கண்டுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்து யாழில் தங்கியிருந்த இந்திய குடும்பஸ்தினர் கண்டுபிடிப்பு

இந்தியாவில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகி இருந்த மற்றுமொரு குடும்பம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் அரிச்சலூர் இடைத்தங்கல் முகாமில் வசித்து வந்த வயோதிப பெண், அவரது பிள்ளையும் மற்றும் அவரது இரு பேரக்குழந்தைகள் ஆகிய நால்வரும் படகு மூலம் நாட்டுக்குள் நுழைந்து குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்துள்ளனர்.

அதன்படி, யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

34 வயதுடைய பெண் ஒருவர் அவரின் 9 மற்றும் 5 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் குறித்த பெண்ணின் 61 வயதுடைய தாய் ஆகியோரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இவர்கள், படகு ஊடாக மன்னார் பகுதிக்கு வந்து பின்னர் யாழ்ப்பாணம் - குருநகர் பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர்கள் இன்று (13) பி.சி.ஆர் பரிசோனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment