அதி சிறந்த அல்குர்ஆன் காரியாவாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமிக்கு பிரித்தானியாவில் மகுடம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

அதி சிறந்த அல்குர்ஆன் காரியாவாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமிக்கு பிரித்தானியாவில் மகுடம்

ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பழமை வாய்ந்ததும் பிரபலமானதுமான இஸ்லாமிய தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான "இஸ்லாம் சனல் டீவி" கடந்த 15 வருடங்களாக தொடராக நடாத்தி வரும் தேசிய ரீதியிலான "அல் குர்ஆன் கிராஅத் போட்டி" நிகழ்ச்சித் தொடரில் முதல் தடவையாக கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்று 2021 ஆம் ஆண்டின் ஐக்கிய இராஜ்ஜியத்தின் "அதி சிறந்த அல்குர்ஆன் காரியாவாக "இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒன்பது வயது மர்யம் ஜெஸீம் மகுடம் சூட்டப்பட்டார்.

ஐக்கிய இராஜ்ஜியத்தில் பிரபலமான இப்போட்டி நிகழ்ச்சியில் 6- தொடக்கம் 14 வயதுடைய நூற்றுக் கணக்கான போட்டியாளர்கள் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பாகங்களிலிருந்தும் கலந்து கொண்டிருந்தனர் .

ஒன்பது வயதுடைய மர்யம் ஜெஸீம் இங்கிலாந்தின் இஸ்லாம் சனல் தொலைக்காட்சி வழங்கும் இச் சிறப்பு மகுடத்தை அதி குறைந்த வயதில் வென்ற, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட முதலாவது சிறுமியாகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

படத்தில் மர்யம் ஜெஸீம், கட்டார் ஸ்கை தமிழின் ஆலோசகராக விளங்கும் தனது தந்தையான ஜெஸீம் எ. ஹமீத்துடன் காணப்படுகிறார்.

No comments:

Post a Comment