வாழைச்சேனை சுகாதார பிரிவில் முதலாவது கொரோனா மரணம் : நான்கு பேருக்கு தொற்று - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

வாழைச்சேனை சுகாதார பிரிவில் முதலாவது கொரோனா மரணம் : நான்கு பேருக்கு தொற்று

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், முதலாவது கொரோனா மரணம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் வெளிநபர்கள் இருபத்தியைந்து பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மீன்பிடித் துறைமுகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கும், வெளி நபர்கள் மூவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதலாவது கொரோனா மரணம் இடம்பெற்ற நிலையில், மரணித்த 63 வயதுடைய ஓய்வுபெற்ற பெண் வைத்தியருடன் நேரடித் தொடர்புடையவர்கள் பதினாறு பேருக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, இதன் மாதிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

குறித்த பி.சீ.ஆர். பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆர்.நிதிராஜ் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படும் நிலையில், மக்களின் பாதுகாப்புக்கருதி தொடரச்சியாக பி.சீ.ஆர். பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments:

Post a Comment