எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்த சட்டமா அதிபர் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 30, 2021

எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்த சட்டமா அதிபர்

(எம்.எப்.எம்.பஸீர்)

எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலில் பரவிய தீ தொடர்பில் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம், நேற்று அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்தார். 

சட்டமா அதிபர் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடற்படை தளபதி, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடற்சார் விடயங்கள் தொடர்பிலான விவகாரங்களை மேற்பார்வை செய்யும் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்ததாக அறிய முடிகின்றது.

இதன்போது கப்பல் தீ காரணமாக இலங்கையின் கடற்பரப்பு மற்றும் சமுத்திர சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும், அது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள், நட்ட ஈடு பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இக்கலந்துரையாடலின் போது, 10 நாட்களுக்கும் மேலாக கப்பலின் நிலைமை தொடர்பில் மிக விரிவாக கேட்டறிந்து கொண்டுள்ள சட்டமா அதிபர், சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளுக்கு உடனடி ஆலோசனைகள் பலவற்றையும் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்பு சட்டத்தின் பிரகாரம் செயற்படுவது தொடர்பிலும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment