தம் மீதான தடையை மீளாய்வு செய்யுமாறு கோரி முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் - News View

Breaking

Post Top Ad

Friday, May 7, 2021

தம் மீதான தடையை மீளாய்வு செய்யுமாறு கோரி முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ், இலங்­கையில் தடை செய்யப்பட்­டுள்ள முஸ்லிம் அமைப்­புக்­களில் பல, தம் மீதான தடையை மீள் பரி­சீ­லனை செய்­யு­மாறு கோரி ஜனா­தி­ப­திக்கு தனித் தனி­யாக கோரிக்கை கடி­தங்­களை அனுப்­பி­யுள்­ளன.

நேற்றுமுன்தினம் மாலை­ வரை மூன்று அமைப்­புக்கள் இவ்­வாறு மீள் பரிசீலனை கோரி கடி­தங்­களை அனுப்­பி­யுள்­ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் சில அமைப்­புக்கள் அதற்­கான நடவ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­மையை உறுதி செய்ய முடிந்­தது.

தடையை எதிர்த்து உயர் நீதி­மன்றில் வழக்குத் தொடுக்க முன்னர் இவ்­வா­றான ஒரு மீள் பரி­சீ­லனை தொடர்பில் ஜனா­தி­ப­தி­யிடம் கோரி­யுள்­ள­தாக, மீளாய்வு கோரி கடிதம் அனுப்­பி­யுள்ள அமைப்பொன்றின் முக்­கி­யஸ்தர் தெரி­வித்தார்.

அதன்­படி சி.டி.ஜே எனும் சிலோன் தெளஹீத் ஜமாஅத், ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத் (யூ.டி.ஜே.), அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ஏ.சி.டி.ஜே.) ஆகிய அமைப்­புக்கள் ஜனா­தி­ப­திக்கு மீள் பரி­சீ­லனை கோரி கடி­தங்­களை அனுப்­பி­யுள்­ளன.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (எஸ்.எல்.டி.ஜே.) ஜம்­மி­யதுல் அன்­ஸாரி சுன்­னதுல் மொஹ­ம­தியா (ஜே.ஏ.எஸ்.எம்.) போன்ற அமைப்­புக்­களும் இவ்­வா­றான முயற்­சி­களில் ஈடு­பட்­டு­ள்ள­தாக அறிய முடி­கின்­றது.

நாட்டின் சமா­தா­னத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு, பொது­மக்கள் ஒழுங்கு மற்றும் சட்­ட­வாட்­சியின் நலனில் அர­சாங்­கத்தின் முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அடிப்படைவாதத்­துடன் தொடர்­பு­டைய 11 அமைப்­பு­களை தடை செய்­வ­தாக கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி அதி­வி­சேட வர்த்­த­மா­னியை வெளி­யிட்டு அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்­டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்கு விதி­க­ளுக்­க­மைய குறிப்­பிட்ட 11 அமைப்­பு­களும் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக வர்த்­த­மானி அறி­வித்­தலில் சுட்டிக்காட்டப்­பட்­டுள்­ளது.

Vidivelli

No comments:

Post a Comment

Post Bottom Ad