எம்.எஸ்.எம்.ஸாகிர்
உலக முஸ்லிம்களாகிய நாம் எந்த நாட்டில், எந்தப் பகுதியில் இருந்தாலும் ஆங்காங்கே இருக்கக்கூடிய ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் மத, இன, மொழிகளைக் கடந்து அனைத்து மக்களுடைய இன்ப, துன்பங்களில் பங்கேற்று, அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்துவிட வேண்டும் என்பதுதான் நாம் ஒவ்வொருவரும் இந்த சிறப்பு மிக்க ரமழான் நோன்புப் பெருநாளின் முக்கிய சூழுரையாக இருக்க வேண்டும். இந்தப் புனிதமிக்க ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை வீட்டிலிருந்தே குடும்பத்தோடு சந்தோசமாகக் கொண்டாடுவோம் என சிங்கப்பூர் முஸ்லிம் லீக் சமூக, நல்லிணக்க, சேவை அமைப்பின் தலைவரும் புதிய நிலா பிரதம ஆசிரியருமான மு. ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார்
சிங்கப்பூரில் இருந்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்காக வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இனிய சமூக உறவுகளே! இன்றைக்கு உலகம் கொவிட் - 19 என்ற கொடிய நோயினுடைய கோரத்தாண்டவத்தால் சொல்லொணாத் துக்கங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகி வருவதை நாம் கண்டு வருகிறோம். ஒரு குறிப்பிட்ட பகுதியில், நாடுகளில் மட்டுமல்லாமல், இன்றைக்கு உலகில் பெரும்பாலான நாடுகளில் அந்த நோயினுடைய தாண்டவம் மிகக் கொடூரமாகிக் கொண்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம். அதன் விளைவாக ஆங்காங்கே வாழக்கூடிய மக்கள் தங்களுடைய வேலை, வருமானம் என வாழ்வாதாரங்களை இழந்து வருவதன் காரணமாகவும் அதன் எதிரொலியாகவும் மன அழுத்தத்துக்கும் மன உளைச்சலுக்கும் அளாகி வருவதாக உலக சமூச ஆய்வுகள் கூறுகின்றன. மண்ணில் உள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான் என்பது நபி(ஸல்) அவர்களது அருள் மொழியாகும்.
இந்தக் காலமும் கடந்து போகும்: இந்த வலியும் மறந்து போகும். காற்றை சுவாசித்தால் உயிர் வாழலாம்: நம்பிக்கையை சுவாசித்தால் உயர்ந்து வாழலாம், காற்று உயிர் தரும்: நம்பிக்கை உயர்வு தரும் அதுபோல் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நம்பிக்கை வைத்து நம்முடைய பயணங்களைத் தொடங்குவோம். அல்லாஹ் போதுமானவன்.
இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் புனிதமிக்க ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்! என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment