(செ.தேன்மொழி)
பொலிஸ் கான்ஸ்டேபிள் சேவையில் இணைந்து கொள்வதற்காக விண்ணப்பித்திருந்த, விண்ணப்பதாரிகளுக்கான எழுத்து மூல தேர்வு பிற்போடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் கான்ஸ்டேபிள் சேவையில் இணைந்துக் கொள்வதற்காக விண்ணப்பத்திருந்த விண்ணபதாரிகளுக்கான எழுத்துமூல தேர்வு இம்மாதம் 8 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவிருந்தது. இந்த தேர்வானது மீள் அறிவிக்கும் வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு, அநுராதபுரம், காலி ,கண்டி மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளிலேயே இந்த தேர்வுகள் இடம்பெறவிருந்தன.
எனினும் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற் கொண்டு தேர்வுகளை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பான மேலதிக விபரங்களை 011-5811921, 011-5811925 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புக் கொண்டு அறிந்துக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment