அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இரண்டு கிலோ கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவரை இன்று புதன்கிழமை (5) விசேட அதிரடிப் படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று புதன்கிழமை காலை திருக்கோவில் பகுதியிலுள்ள குறித்த வீட்டை விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
இதன்போது குறித்த பெண்ணின் கணவர் யாழ்ப்பாணத்தில் இருந்து பஸ் வண்டியில் இன்று அதிகாலையில் இரண்டு பொதிகளுடன் வந்துள்ளதாகவும் அதனை அவர் வீட்டில் ஒழித்து வைத்துவிட்டு பொத்துவிலுக்கு சென்றுள்ளதாகவும் கொண்டுவந்த இரண்டு கிலோ கஞ்சாவை விற்பதற்கு வைத்திருந்த நிலையில் விசேட அதிரடிப் படையினர் அதனை வாங்குவதாக நாடகமாடி சென்ற நிலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குறித்த வீட்டிலிருந்த பெண் ஒருவரை கைது செய்ததுடன் 2 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணையும் கஞ்சாவையும் விசேட அதிரடிப் படையினர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment