புர்கா குறித்து முஸ்லிம் சமூகம் சிந்தித்து செயற்பட வேண்டும் - தனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் அலி சப்ரி - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

புர்கா குறித்து முஸ்லிம் சமூகம் சிந்தித்து செயற்பட வேண்டும் - தனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் அலி சப்ரி

புர்கா ஆடை என்பது அராபிய கலாசாரம். இதனை சமூகம் என்ற வகையில் முஸ்லிம் சமூகமே சிந்தித்து புர்கா அணிவதை நிறுத்த வேண்டுமென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

புர்காவை நானும் எதிர்க்கிறேன். இதனைக் கடந்த பத்து வருடங்களாகவே கூறி வருகிறேன். புர்காவுக்கு தடை விதிப்பதற்கு அப்பால் புர்கா அணியக் கூடாதெனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

தனது மதத்தை மற்றொருவருக்குக் கொண்டு செல்வது முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒன்று. எனவே, இதற்கு ஏனையோருடன் முதலில் கலந்துரையாட வேண்டும். இதனை விடுத்து முகத்தை மூடிக்கொண்டு இருப்பது பயனற்றதெனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றும்போது, அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டுப் பெரும்பான்மை இருந்தது. 

எனினும் அனைவரதுக் கருத்துகளையும் கேட்டு நடுநிலைமையாகவே இதன்போது அரசாங்கம் செயற்பட்டது என்றார். 

இச்சட்ட மூல வாக்கெடுப்பின்போது தனது வாக்கையும், பாராளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத்தின் வாக்கும் கணக்கில் எடுக்கப்படாது தவற விடப்பட்டுள்ளது என்றார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் புர்காவுக்கு தடை விதிக்கவில்லை.

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களிடமிருந்து பிரிவதற்கு புர்காவும் ஒரு காரணமென கடந்த அரசாங்கம் கூறியது. கடந்த அரசாங்கத்தின் பரிந்துரையே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad