அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு : 9 பேர் பலி ! - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு : 9 பேர் பலி !

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் துப்பாக்கிதாரி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சன் ஜோஸ் நகரில் ரயில்கள் நிறுத்தி வைக்கப்படும் பகுதிக்கு அருகிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதிக்கு துப்பாக்கியுடன் வந்த இனந்தெரியாத நகர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்ய முயற்சித்தனர்.

ஆனால், அந்த நபர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ரயில்வே தொழிலாளர்களின் கூட்டத்தின் போதே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் தொழிற்சங்க கூட்டமொன்றின் போதே குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவுவம் செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad