கொரோனா தொற்றை தடுத்துக் கொண்டு பட்டினியும் வராமல் பொருளாதாரத்தை வீழ்சியடையாமலும் வெற்றி நடைபோட மக்கள் கவனமாக உணர்ந்து செயற்பட வேண்டும் - பிள்ளையான் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 27, 2021

கொரோனா தொற்றை தடுத்துக் கொண்டு பட்டினியும் வராமல் பொருளாதாரத்தை வீழ்சியடையாமலும் வெற்றி நடைபோட மக்கள் கவனமாக உணர்ந்து செயற்பட வேண்டும் - பிள்ளையான்

ஆடைத் தொழிற்சாலையை மூடிவிட முடியும். ஏதோ இதை தடை செய்துவிட்டால் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என எண்ண வேண்டாம். கொரோனா தொற்றை தடுத்துக் கொண்டு பட்டினியும் வராமல் பொருளாதாரத்தை வீழ்சியடையாமலும் வெற்றி நடைபோட மக்கள் கவனமாக உணர்ந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என அறியப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று பலரிடம் இருந்து ஆடைத் தொழிற்சாலையில் இருந்து தொற்று வருகின்றது முறைப்பாடு வருகின்றது ஆடைத் தொழிற்சாலையை மூடிவிட முடியும் அதில் அதிகமான பிள்ளைகள் அதிகமாக பணியாற்றுகின்றார்கள் என்பதற்காக கொரோனா தொற்றாது என்பற்கல்ல.

இதை எப்படிக் கட்டுப்படுத்தி அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உற்பத்தியை அதிகரித்து வெளிநாட்டு வருமானத்தை ஈட்டக்கூயதை கவனமாக கையாள முடியும் என்பதை ஆராயுங்கள் முடிந்தால் பணியாற்றுபவர்களை அவர்களது வீடுகளில் கவனமாக சென்று வருதற்கான சூழ்நிலை ஏற்படுத்த முடியுமானால் அதை செய்ய வேண்டும்.

மக்கள் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என்னமுள்ளவர்கள் நாங்கள் கிராம பொருளாதாரத்தில் வாழும் மக்கள் ஏன் ஒட்டு மொத்த நாட்டிலேயும் 40 வீதமான மக்கள் அன்றன்று உழைத்து வாழுகின்ற மக்கள் இதனை கருத்தில் கொள்ளாமல் இயங்க முடியாது பொறுப்பாக சிந்தியுங்கள் ஏதோ இதை தடை செய்து விட்டால் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என எண்ண வேண்டாம்.

இந்த கொரோனா தொற்றை தடுத்துக் கொண்டு பட்டினியும் வராமல் பொருளாதாரத்தை வீழ்சியடையாமலும் கவனமாக வெற்றி நடைபோட வேண்டும் என்கின்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எமது கருத்து அதற்காக பொறுப்பு இல்லாமல் யாரும் இயங்க வேண்டாம்.

மட்டக்களப்பிலும் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது கவலையளிக்கின்றது கொரோனா தொற்று ஆரம்ப காலத்தில் ஏற்பட்டபோது மக்கள் அதிக கவனம் செலுத்தினார்கள் ஆனால் தற்போது அது குறைவாகவுள்ளது. இருந்தபோதும் இப்போது எல்லாவிதமான தடைகளும் இருக்கும்போது மக்கள் கவனமாக தனித்தனி மனிதராக பொறுப்புக் கூற வேண்டியவர்களாக இருக்க வேண்டும்.

உதாரணமாக மருதநகரில் ஒருவருக்கு சந்தேகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு அறிக்கை வருவதற்கு முன்னர் அவர் அங்கு நடந்த மரண வீட்டில் கலந்து கொண்டார். அதன் காரணமாக அந்த மரண வீட்டில் கலந்துகொண்ட 25 பேருக்கு தொற்று ஏற்பட்டது எனவே ஒரு தனிநபருக்கு தெரிய வேண்டும் எனக்கு சந்தேகம் வந்திருக்கின்றது பி.சி.ஆர் எடுத்திருக்கின்றேன் அறிக்கை கிடைக்கும் வரைக்கும் நான் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என.

இப்படியான விடயங்களினால் தற்போது 2 ஆயித்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று பரவியுள்ளதுடன் 25 பேர் மரணமடைந்துள்ளனர் இது விரைவாக அதிகரித்தால் எப்படி கட்டுப்படுத்துவது என சுகாதார பிரிவினருக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது ஆகையால் மக்கள் கவனமாக உணர்ந்து செயற்பட வேண்டும்

வீடுகளில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏனைய பிரச்சனைகள் வரலாம். இவ்வாறு பல நெருக்கடிகள் இருக்க முடியும் இந்த நெருக்கடிகளை சமாளித்து கட்டுப்படுத்தினால் மாத்திரம் இதில் இருந்து மீளமுடியும்.

அரசாங்கம் என்ற அடிப்படையிலே நாங்கள் விரைவாக தடுப்பூசி எற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதற்கமைய சில நாட்களில் தடுப்பூசி மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற நிர்வாகத்தை இயக்குவதற்கு கிராமம் தோறும் இருக்கின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு, உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து பணியாற்றுன்கின்றவர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் போன்ற நேரடியாக மக்களுடன் கடமையாற்றுகின்றவர்களுக்கும் அடுத்த கட்டமாக வர்த்தகர்கள் வியாபாரிகள் போன்றவாகளுக்கு தடுப்பூசி ஏற்ற முயற்சி எடுத்துள்ளோம் என்றார்.

கேசரி 

No comments:

Post a Comment