மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 114 கொரோனா தொற்றாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 27, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 114 கொரோனா தொற்றாளர்கள்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (27.05.2021) 114 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தோறும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை பிரதேச ரீதியாக தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேரும் , ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேரும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேரும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேரும் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும் வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேரும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேருமாக மொத்தம் 114 பேருமாக கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment