செயலிழக்கச் செய்யப்பட்டது நுலைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

செயலிழக்கச் செய்யப்பட்டது நுலைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி

நுலைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி தற்காலிகமாக இன்று (28.05.2021) செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

பாரமரிப்பு நடவடிக்கைகளுக்காகவே குறித்த மின் பிறப்பாக்கி தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது 200 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய மழை பெய்துள்ளது

நீர் சக்தி வழியாக மின்சார அலகு ஒன்றை உருவாக்குவதற்கு 02 ரூபாய் செலவாகிறது. டீசல் சக்தி வழியாக உருவாக்க அலகு ஒன்றை உருவாக்குவதற்கு 30 ரூபாய் செலவாகிறது.

மேலும், இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மின்சார தேவை 30 சதவீதம் குறைந்துள்ளது.

மூன்றாவது மின் பிறப்பாக்கி செயலிழக்கச் செய்யப்பட்டமையால் பிரச்சினை ஏற்படாது. ஏனெனில் நீர் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment