தொழில் திணைக்களத்தின் ஊழியர் சேபலாப நிதியப் பிரிவின் சேவைகள் இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 11, 2021

தொழில் திணைக்களத்தின் ஊழியர் சேபலாப நிதியப் பிரிவின் சேவைகள் இடைநிறுத்தம்

தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் ஊழியர் சேபலாப நிதியப் பிரிவின் சேவைகளை இன்றும் (12) நாளையும் (13) இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகத்தின் ஊழியர் சேமலாப நிதியத்தின் சாதாரண கொடுப்பனவு பிரிவு மாத்திரம் இயங்கும் என தொழில் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​இந்த பிரிவில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளின் 30 வீதத்தை முற்கூட்டிய கொடுப்பனவாக வழங்கும் பிரிவின் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment