மியன்மாரின் இராணுவ அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் சீனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 11, 2021

மியன்மாரின் இராணுவ அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் சீனா

மியன்மாரில் கடந்த செப்டெம்பர் 1ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி தொடக்கம் இராணுவம் ஆட்சியாளர்களுக்கு சீனா போதுமான சர்வதேச ஆதரவை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

மியன்மாரில் பிரதான உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய திட்டங்களுக்கு முதலீடு செய்யும் சீனா அதனுடனான நாளாந்த 16 மில்லியன் டொலர் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறது.

பல முதலீடுகளில் மியன்மார் மேற்கு பிராந்தியம் மற்றும் சீன வரை செல்லும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு குழாய் முக்கிமானதாக பார்க்கப்படுகிறது. 

இந்த மசகு எண்ணெய் குழாயினால் ஆண்டுக்கு 22 மில்லியன் தொன்களும், இயற்கை வாயு குழாயினால் 12 பில்லியன் கன மீற்றர் எரிவாயுவும் எடுத்துச் செல்லப்படுகிறது.

மியன்மாரின் இராணுவ அரசுக்கு பல தசாப்தங்களாக சீனா அளிக்கும் ஆதரவு தொடர்பில் மியன்மார் மக்கள் அதிருப்தியில் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment