‘கிணற்றைக் காணோம்’ காமெடி புகழ் நடிகர் நெல்லை சிவா காலமானார்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 11, 2021

‘கிணற்றைக் காணோம்’ காமெடி புகழ் நடிகர் நெல்லை சிவா காலமானார்!

நெல்லை தமிழில் பேசி தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்.

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ், மாரடைப்பு காரணங்களால் பல திரையுலக பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில் நெல்லை சிவா நேற்று மாலை 6.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். நெல்லை சிவா விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்தார். 

அவரின் நல்லடக்கம் இன்று 12.5.2021 நண்பகலில் அவரின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.

இவர் 80 களில் நடிக்கத் தொடங்கி தற்போது வரை திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்து பிரபலமானவர்.

நெல்லை சிவா என்ற திரைப்பெயரால் நன்கு அறியப்பட்ட சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி, 1952 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர், 1985 இல் வெளியான ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமானார். நகைச்சுவை நடிகர் மற்றும் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

மகாபிரபு, வெற்றிக் கொடி கட்டு, கண்ணும் கண்ணும் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

வடிவேலு உடன் சேர்ந்து அவர் நடித்த காமெடி எல்லாம் பெரிய ஹிட். ‘கெனத்தை காணோம்’ காமெடி நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் நெல்லை சிவாவின் மறைவு அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. அவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விவேக், இயக்குநர் கே.வி.ஆனந்த் உள்ளிட்டோரின் மறைவு மறப்பதற்கு முன் மீண்டும் நெல்லை சிவாவின் மறைவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என திரைப்பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment