தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகள் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகள் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் அமைப்புகளில் சில, தமது தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்துள்ளன.

CTJ எனும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத், UTJ எனும் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ACTJ எனப்படும் அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஆகியவை நேற்றுமுன்தினம் (12) தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்துள்ளன.

தவ்ஹீத் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை கொள்கை என்றும் அது தீவிரவாதம் அல்ல என்றும், தவ்ஹீத் அமைப்புகள் ஜனநாயக அமைப்புகள் என்றும் நிரூபிக்கும் விதத்திலும், தவ்ஹீத் அமைப்புகளை தடை செய்வது முஸ்லிம்களில் ஒரு கொள்கை பிரிவை - நிகாயவைச் சேர்ந்தவர்களின் கருத்துச் சுதந்திரம், வழிபாட்டு சுதந்திரம், மார்க்க சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம் ஆகிய அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்பதுடன், தவ்ஹீத் கொள்கையை பின்பற்றுபவர்களின் இயக்க செயல்பாடுகளை தடை செய்து தனிமைப்படுத்துவதன் மூலம் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தமானியை வெளியிட்ட அரசு தரப்பு இதன் மூலம் தவறிழைத்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் தடை உத்தரவு சட்டத்தின் உரிய நடைமுறைக்கு இது மாற்றமானதும் முரணானதும் என்பதால் தடையை நீக்கி ஜனநாயகத்தை நிலை நிறுத்துமாறும் மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment