கப்பல் தீப்பற்றிக் கொண்டதினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 29, 2021

கப்பல் தீப்பற்றிக் கொண்டதினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு

'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பல் தீப்பற்றிக் கொண்டதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த கொடுப்பனவை பெற்றுக் கொள்ள தகுதியானவர்களின் பெயர்பட்டியலை வழங்குமாறு சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கடற்றொழில் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை பயணக்கட்டுப்பாட்டின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படுமென்று சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி பயனாளிகள், அரச கொடுப்பனவு பெறுபவர்கள், கொவிட் தொற்றுக் காரணமாக தொழிலை இழந்தவர்கள், 'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பல் தீப்பற்றிக் கொண்டதன் காரணமாக நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும்.

சுமார் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் மூவாயிரம் கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment