500 மில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியது இலங்கை மின்சார சபை - News View

About Us

About Us

Breaking

Saturday, May 29, 2021

500 மில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியது இலங்கை மின்சார சபை

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளதாக வெளியாகிய ஊடக அறிக்கையை கடுமையாக நிராகரிப்பதாக மின் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் 200 யுனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலங்கை மின்சார சபையினால் முடிந்ததுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான யுனிட் மின்சாரம் டீசல் மூலம் உற்பத்தி செய்யப்பட்டால் அதற்காக ஒரு யுனிட்டுக்கு ரூ. 30 செலவாகும் நீர் மின் சக்தியைப் பயன்படுத்தினால் ரூ. 2 மட்டுமே செலவாகும்.

அதன்படி இலங்கை மின்சார சபை ஒரு யுனிட்டுக்கு ரூ. 25 இலாபம் ஈட்டியுள்ளதுடன் மொத்த இலாபமாக சுமார் 500 மில்லியன் ரூபாய் ஈட்டியுள்ளதாக மின்சார சபையின் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் கொவிட் தொற்று நோயால் விதிக்கப்பட்ட நாடு முழுவதுமான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மின்சாரத்தின் தேவை பெரிதும் குறைவடைந்துள்ளது. அத்துடன் கடும் மழை காரணமாக அதிகபட்ச நீர் திறன் கிடைப்பதால் தம்பபன்னி மின் உற்பத்தி நிலையமும் முழுமையாக செயல்பட்டு வந்தது.

அத்தகைய சூழ்நிலையில் மூன்று நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்களையும் செயற்பாட்டில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்காரணத்திற்காக மட்டுமே நுரைச்சோலையின் ஒரு மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டிருந்தது. மாறாக தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அது மூடப்படவில்லை என்றும் இலங்கை மின்சார சபை தலைவர் விஜிதா ஹேரத் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment