தமிழ் திரையுலகம் இழந்த மற்றொரு நகைச்சுவை நடிகர்! - News View

About Us

About Us

Breaking

Saturday, May 15, 2021

தமிழ் திரையுலகம் இழந்த மற்றொரு நகைச்சுவை நடிகர்!

தமிழில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி காலமான நிலையில், தற்போதுதான் செய்திகள் வெளியாகியுள்ளது.

இவர் காக்கிச்சட்டை, தில்லுக்குத்துட்டு, சதுரங்க வேட்டை, கருப்பன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஐயப்பன் கோபி ஒரு பேட்டியில் கூறும் போது, தான் நடித்துக் கொண்டு இருக்கும் போதே இறந்து போக ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment