இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய கொவிட் சிகிச்சை வைத்தியசாலை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய கொவிட் சிகிச்சை வைத்தியசாலை

(எம்.மனோசித்ரா)

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சையளிப்பதற்காக சீதுவ பிரதேசத்தில் இராணுவத்தினரால் பாரிய வைத்தியசாலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 2,500 படுக்கை வசதிகளுக்கு ஏற்பட நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலையில், எதிர்வரும் இரு தினங்களில் மேலும் 5,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இவ்வைத்தியசாலை, அவசர சிகிச்சையளிக்கக் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, இப்பிரில் எந்த சந்தர்ப்பத்திலும் 1,200 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய வசதிகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கொவிட் கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தில் விரைவில் இராணுவம் விரைவில் வைத்தியசாலைகளுக்கு 10,000 சிகிச்சை படுக்கைகளை வழங்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment