செ.தேன்மொழி
தேசிய நடமாடும் வைத்திய சேவை நிலையத்தின் செயற்பாடுகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன்போது இணையவழியில் விண்ணபித்திருந்த விண்ணப்பதாரிகளுக்கான சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தேசிய நடமாடும் வைத்திய சேவை நிலையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய நடமாடும் வைத்திய சேவை நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வரும் நிலையில் அரச சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
எனினும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு விதிகளுக்கமைய , இந்த சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் தேசிய நடமாடும் வைத்திய சேவை நிலையம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.
இதன்போது, இணையவழியில் விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரிகளுக்கு சேவைகள் வழங்கப்படவுள்ளன.
எனினும் பொலன்னறுவை, நுவரெலியா, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய கிளைகள் இயங்காது. ஆனால் அந்த கிளைகளுடாக சேவையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கு சேவை வழங்க முடியாது. அவர்களுக்கான சேவையை பெற்றுக் கொடுக்கும் தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment