பிரதமரின் வடக்கு, கிழக்கு இணைப்பாளராக கீதநாத் நியமனம் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 6, 2021

பிரதமரின் வடக்கு, கிழக்கு இணைப்பாளராக கீதநாத் நியமனம்

வடக்கு, கிழக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு விடயங்கள் தொடர்பான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இணைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் இணைப்புச் செயலாளராக தற்போது பதவி வகித்து வரும் கீதநாத் காசிலிங்கம் அதற்கு மேலதிகமாக இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த நியமனம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad