கொழும்பு துறைமுக நகர தீர்ப்பு சபாநாயகரிடம் - மே 18 இல் பாராளுமன்றில் அறிவிக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

கொழும்பு துறைமுக நகர தீர்ப்பு சபாநாயகரிடம் - மே 18 இல் பாராளுமன்றில் அறிவிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயம் இன்று (06) சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாக, மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

சபாநாயகரின் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. இதற்கமைய குறித்த தீர்ப்பு எதிர்வரும் 18ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றில் தாக்கல்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எதிராக உச்ச நீதிமன்றில் 19 மனுக்கள்
குறித்த ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சத்தி, ஜேவிபி, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளால் உச்சநீதிமன்றத்தில் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்கள் மீது விசாரணை
சம்பந்தப்பட்ட மனுக்களின் விசாரணை கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி, பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவின் விசாரணை 23ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஐவரடங்கிய குழுவின் கருத்து சபாநாயகருக்கு அறிவிக்கப்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாராளுமன்ற விவாதம் ஒத்திவைப்பு
அதற்கமைய குறித்த சட்டமூலம் தொடர்பான விவாத்தை நேற்றையதினம் (05) எடுத்துக் கொள்ள திட்மிடப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கருத்து சபாநாயகருக்கு கிடைக்காமை காரணமாக, அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

சபாநாயகருக்கு கிடைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு
இதனைத் தொடர்ந்து இன்றையதினம் (06) உச்ச நீதிமன்றத்தின் ஐவரடங்கிய குழுவின் தீர்ப்பு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கிடைத்தள்ளது.

No comments:

Post a Comment