பாதுகாப்புப்படை அதிகாரிகளிடையே பரவும் மர்ம நோய்...! மைக்ரோவேவ் தாக்குதலா? - ரஷ்யாவை சந்தேகிக்கும் அமெரிக்கா - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

பாதுகாப்புப்படை அதிகாரிகளிடையே பரவும் மர்ம நோய்...! மைக்ரோவேவ் தாக்குதலா? - ரஷ்யாவை சந்தேகிக்கும் அமெரிக்கா

அமெரிக்க உளவுப்பிரிவுக்கு எதிராக ரஷ்யா மைக்ரோவேவ் தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ அதிகாரிகள் வெளிநாடுகளில் மர்மமான முறையில் மூளை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

சிஐஏ அதிகாரிகள், தூதர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் என இதுவரை 130 பேர் மூளை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒற்றை தலைவலி, மூக்கில் இருந்து ரத்தம் கொட்டுதல், தலை சுற்றல், குமுட்டல் என பாதிக்கப்படும் அதிகாரிகள், இறுதியில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு பணியாற்ற முடியாமல் அவதியுறும் நிலைக்கு செல்கிறார்கள் என கூறப்படுகிறது.

சீனா, கியூபா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சில ஆசிய நாடுகளில் பணியாற்றியவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 

இந்த மூளை பாதிப்பு, ஹவானா நோய்குறி என்று அழைக்கப்படுகிறது. 2016 இல் கியூபாவின் ஹவானா நகரில் இதுபோன்ற பாதிப்பை அமெரிக்க அதிகாரிகள் எதிர்கொண்டதில் இருந்து இவ்வாறு அழைக்கப்படுகிறது.

இதற்கிடையே, அமெரிக்க அதிகாரிகள் மைக்ரோவேவ் தாக்குதலுக்கு இலக்காகிறார்களா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. மனித உடலை ஊடுருவும் மின்காந்த கதிர்வீச்சைக் கொண்டு நடத்துவதே இந்த தாக்குதல். 

இது போன்ற ஆயுதங்கள் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ரஷ்யாவே அமெரிக்க உளவுபிரிவுக்கு எதிராக இந்த தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அதனை ரஷ்யா மறுத்துள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்ற பாதிப்புகளை அமெரிக்க அதிகாரிகள் எதிர்கொண்டது குறித்து ஆய்வு செய்த அமெரிக்காவின் தேசிய அறிவியல் வாரியம், மைக்ரோவேவ் தாக்குதல் நடந்திருக்க முகாந்திரம் உள்ளதாக கூறி உள்ளது. எனவே, இது குறித்து பைடன் நிர்வாகம் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment