முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை கண்டிக்கத்தக்க விடயம், இதை யார் செய்திருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை கண்டிக்கத்தக்க விடயம், இதை யார் செய்திருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டது என்பது கண்டிக்கத்தக்க ஒன்றான விடயம் என இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக கொரோனா சிகிச்சை நிலைய பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அப்பணியினை பார்வையிட கரடியனாறு பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயத்தினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்பது பாதிக்கப்பட்ட உறவுகள் தமது சொந்தங்களை, உறவினர்களை, தமது பிள்ளைகளை, அம்மாவை, அப்பாவை ஆத்மார்த்தமாக நினைவு கூறும் இடம். அந்நினைவுத்தூபியை உடைத்த செயற்பாடு என்பது என்னைப் பொறுத்தளவில் வன்மையாக கண்டிக்கத்தக்க வேண்டிய விடயம்.

இதை யார் செய்திருந்தாலும் அவர்கள் நிச்சயமாக கைது செய்யப்பட வேண்டும். அது சம்மந்தமான விசாரணைகளை பொலிசார் முன்னெடுக்க வேண்டும். இது இனங்களுக்கிடையே ஒரு நல்லுறவை குழப்புகின்ற அல்லது ஒரு வன்மத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக நான் பார்க்கின்றேன்.

ஆகவே நினைவுத்தூபி உடைக்கப்பட்ட விடயம் என்பது கண்டிக்கத்தக்க விடயம். அத்துடன் கிறிஸ்தவ மதகுருமார்களினால் நடுகல் வைக்கப்பட்டது அதுகூட பாதிக்கப்பட்டதாக அறிகிறோம்.

இந்த நினைவுத்தூபியை சேதப்படுத்தியவர்கள் எந்த தரப்பினராக இருந்தாலும் அவர்கள் பொலிசாரினால் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது. இவ்வாறான செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் நல்லுறவை சீர்குலைக்கம் செயற்பாடாக அமையும். ஆகவேதான் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது.

அதேநேரம் இவ்வாறான செயற்பாடுகளை செய்பவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட வேண்டும் என்பதை நான் கூறிக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment