இரண்டு தினங்களில் காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் கொவிட் தொற்றினால் மரணம் - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

இரண்டு தினங்களில் காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் கொவிட் தொற்றினால் மரணம்

கடந்த இரண்டு தினங்களில் காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் கொவிட் தொற்றினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளனர். இவ்வாறு மரணமடைந்துள்ள இருவரும் ஆண்களாகும்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காத்தான்குடியைச் சேர்ந்த 70 வயதுடைய நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (30) நேற்று மரணமடைந்துள்ளார். அதே போன்று (31) திங்களட்கிழமை இன்று 56 வயதுடைய நபர் ஒருவரும் மரணமடைந்துள்ளார்.

கொவிட் தொற்று மூன்றாவது அலையில் காத்தான்குடியைச் சேர்ந்த பெண்ணொருவர் உட்பட 4 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொவிட் தொற்று காரணமாக இதுவரை காத்தான்குடியில் ஒரு பெண் உட்பட 7 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நாம் மிக அவதானமாக நடந்து கொள்வதுடன் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை ஏற்று நடந்து கொள்ள வேண்டும். அவசியமில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் .வரக்கூடாது.

எம் எஸ் எம் நூர்தீன்

No comments:

Post a Comment

Post Bottom Ad