வவுனியாவில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

வவுனியாவில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா வைத்தியசாலையிலுள்ள கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்றுவந்தவர், சிகிச்சைப் பலனின்றி இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார்.

நெடுங்கேணி - கற்குளம் பகுதியை சேர்ந்த 52 வயதான இவரை, சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அவரது உறவுகள் அண்மையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வவுனியா வைத்தியசாலையிலுள்ள கொரோனா விடுதிக்கு மாற்றி, அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை வழங்கி வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad