கொவெக்ஸ் தடுப்பூசிப் பகிர்வுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நீக்கும் முயற்சியில் உலக சுகாதார அமைப்பு ஈடுபட்டுள்ளது.
இந்தியாவின் சீரம் நிறுவனம், தடுப்பூசிகளை வழங்க முதலில் ஒப்புக் கொண்டதை நிறைவேற்ற முடியாமல் போகலாம்.
இந்நிலையில், அந்த அமைப்பு உலக அளவில் நோய்ப்பரவல் மீட்சிக்கான முயற்சிகளை அதிகரிக்க ஜி-7 தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உச்சநிலை மாநாட்டில் அது தொடர்பில் உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அது கேட்டுக் கொண்டது.
ஜி-7 நாடுகளின் உதவியின்றி இந்த சுகாதார நெருக்கடியைத் தீர்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.
தடுப்பூசிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள் ஆகிய வளங்கலுக்கான நிதியை அந்நாடுகள் கொண்டிருப்பதாக, அமைப்பின் தலைமைச் செயலாளர் டொக்டர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் கூறினார்.
அவருடைய கூற்றை ஆதரித்த, பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் நோய்ப்பரவல் இன்னும் மோசமாகிவருவதாக எச்சரித்தார்.
No comments:
Post a Comment