அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் மொடல் அழகி பியூமி கைதாகி பிணையில் விடுதலை - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் மொடல் அழகி பியூமி கைதாகி பிணையில் விடுதலை

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, பிறந்தநாள் விருந்துபசாரம் நடாத்திய குற்றச்சாட்டு தொடர்பில் அழகுக்கலை நிபுணரும், நிகழ்வு ஒழுங்குபடுத்தல் நிபுணருமான சந்திமால் ஜயசிங்க மற்றும் சிங்கள நடிகையும், மொடல் அழகியுமான பியூமி ஹங்சமாலி ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (30) கொழும்பிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலொன்றில் குறித்த விருந்துபசாரம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த கைது முன்னெடுக்கப்பட்டதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த இருவரும் கொழும்பு, கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த விருந்துபசாரத்தில் சுமார் 25 பேர் வரை கலந்து கொண்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதுடன், அவர்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏனையோரை அடையாளம் காண்பது தொடர்பில் ஹோட்டலின் CCTV காட்சிகளை சோதனையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த இருவரும் இன்றையதினம் (31) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ரூபா 10 இலட்சம் கொண்ட தலா இரு சரீரப்பிணைகளில் அவர்கள விடுவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad