வியட்நாம் சென்றவர்கள் இலங்கை வர தற்காலிகத் தடை - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

வியட்நாம் சென்றவர்கள் இலங்கை வர தற்காலிகத் தடை

வியட்நாமில் பரவும் அதி வீரியம் மிக்க கொரோனா புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடந்த 14 நாட்களில் வியட்னாமுக்கு சென்ற பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க தற்காலிக தடை விதிப்பதாக, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பிரிட்டன் திரிபுகளின் கலவையாக அடையாளம் காணப்பட்டுள்ள இது, காற்றில் வேகமாகப் பரவக்கூடிய புதிய கொரோனா திரிபு என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதற்கமையவே குறித்த தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாம் ஊடாக பயணித்தவர்கள் (Transit) உள்ளிட்ட அந்நாட்டுக்கு பயணித்த எவருக்கும் இலங்கை வருவதற்கு அனுமதி இல்லை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad