நல்லடக்க இடத்திற்கு உறவினர்கள் இருவர் மாத்திரம் வரவும், ஏனையோர் வருவதை தவிர்க்கவும் - ஜனாஸாக்களை பல நாட்கள் குளிரூட்டிகளில் வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்த வேண்டாம் : வினயமுடன் கேட்டுக் கொள்கிறார் ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 11, 2021

நல்லடக்க இடத்திற்கு உறவினர்கள் இருவர் மாத்திரம் வரவும், ஏனையோர் வருவதை தவிர்க்கவும் - ஜனாஸாக்களை பல நாட்கள் குளிரூட்டிகளில் வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்த வேண்டாம் : வினயமுடன் கேட்டுக் கொள்கிறார் ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடிக்கும் தனிமைப்படுத்தல் நிலமை ஏற்பட்டால் கொரோனா பாதிப்பு ஜனாஸாக்களை பல நாட்கள் குளிரூட்டிகளில் வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் என ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூலம் கொவிட்19 ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக ஓட்டமாவடி சகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், பொது அமைப்புக்கள் மற்றும் பிரதேச சபை என்பன இணைந்து எடுத்த தீர்மாணத்திற்கு அமைவாக மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோளில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோளானது ஓட்டமாவடி பிரதேசத்தில் கொவிட்டினால் மரணமடையும் ஜனாஸா நல்லடக்க பணிகளை இரு உலமாக்கள், பிரதேச சபை ஊழியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பொது சுகாதார பரிசோதகர்கள், ஜனாஸா நலன்புரி சங்கத்தினர், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் இராணுவத்தினர் மிகவும் கரிசனையுடனும், தியாகத்துடனும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களினை எமது மேலான துஆக்களில் இணைத்துக் கொள்வோம். 

நேற்று வரை நூற்றுக்கு மேற்பட்ட ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டில் இன்று மிக வேகமாக பரவி வரும் பயங்கரமான கொவிட்19 தாக்கம் காரணமாக மரணங்கள் அதிகரித்து வருவதையும், நல்லடக்க பணியினது சிரமங்களும் ஆபத்துக்களும் அதிகரிப்பதையும் நாம் அறிவோம்.

இந்த வேகத்தில் ஓட்டமாவடி பகுதியும் கொரோனா தாக்கத்தின் காரணமாக தனிமைப்படுத்தல் நிலமை உட்பட்டால் கொரோனாவினால் நாடலாவிய ரீதியில் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முடியாமல் பல நாட்கள் குளிரூட்டிகளில் வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்.

எனவே நிலைமைகளை மிகக்கவனமாக கையாளும் முகமாக கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாவை நல்லடக்கம் செய்யும் இடத்திற்கு நெருங்கிய உறவினர்கள் இருவரும் வாகன சாரதியுமே பாதுகாப்புப் படையினர் உள்வர அனுபதிப்பதன் காரணமாக இருவர் மாத்திரமே உடன் வருமாறும், ஏனையோர் வருவதை முழுமையாக தவிர்ந்து கொள்ளுமாறும் வினயமுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் இங்கு மக்கள் அதிகமாக வருகை தருவதன் காரணமாக இப்பிரதேசத்தில் கொரோனா நோய் பரவல் ஏற்படுவதை தடுக்கும் முகமாக இவ்வறிவித்தல் விடுக்கப்படுகின்றது. 

நிலைமை சீரடைந்ததும் மையவாடிகளை தரிசிப்பதற்குரிய சிறந்த ஏற்பாடுகள் செய்து தர முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment