கொரோனாவை தடுக்கும் என்ற நம்பிக்கையில் மாட்டு சாணத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்து இந்திய மருத்துவர்கள் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 11, 2021

கொரோனாவை தடுக்கும் என்ற நம்பிக்கையில் மாட்டு சாணத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்து இந்திய மருத்துவர்கள் எச்சரிக்கை

கொவிட்-19 ஐ தடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்தியாவில் மாட்டு சாணத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கொவிட்-19 க்கு எதிராக மாட்டு சாணம் மற்றும் கோமியத்தின் செயல்திறனுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் அது ஏனைய நோய்களை பரப்பும் அபாயம் இருப்பதாகவும் இந்திய மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியா மீது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, இதுவரை 22.66 மில்லியன் நோயாளர்களும் 246,116 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

மேலும் நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன் அல்லது மருந்துகளைக் பெற்றுக் கொள்ள சிரமப்படுகிறார்கள், சிகிச்சையின்மை காரணமாக பலர் உயிரிழக்கும் பரிதாபகரமான நிலையும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் மேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில், சிலர் வாரத்திற்கு ஒரு முறை மாட்டு தொழுவங்களுக்கு சென்று மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்தை தங்கள் உடல் முழுவதற்கும் பூசி வருகின்றனர்.

இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அல்லது கொரோனா வைரஸிலிருந்து மீட்க உதவும் என்ற நம்பிக்கையினையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment