மட்டக்களப்பில் மட்டி எடுக்கச் சென்றவர் சடலமாக மீட்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

மட்டக்களப்பில் மட்டி எடுக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள முகத்துவாரம் ஆற்று வாய்ப ஆற்று பகுதியில் மட்டி எடுப்பதற்கு சென்ற மீனவர் ஒருவர் நேற்று காணாமல் போன நிலையில் இன்று (30) ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான றமேஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் சம்பவதினமான நேற்று (29) மாலை முகத்துவாரம் ஆற்றுவாய் ஆற்றில் மட்டி எடுப்பதற்காக சென்ற நிலையில் ஆற்று நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து பொதுமக்களும் படையினரும் இணைந்து தோடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது காணாமல் போயிருந்த இளைஞர் இன்று (30) காலை ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்டு பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கும்படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment

Post Bottom Ad