மன்னாரில் ட்ரோன் கெமரா உதவியுடன் 15 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

மன்னாரில் ட்ரோன் கெமரா உதவியுடன் 15 பேர் கைது

மன்னாரில் இன்றையதினம் (30) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கெமராவை பயன்படுத்தி மன்னார் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்துள்ளனர்.

இதன்போது கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேர் இன்று மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரில் மைதானங்களில் இளைஞர்கள் கூடி விளையாடியமை, வீதிகளில் கூடி நின்றமை ஆகியவை ட்ரோன் கெமராவின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு மன்னார் பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறி அனுமதி இன்றி வெளியில் பயணிப்போர் மற்றும் வீதிகளில் அநாவசியமான முறையில் நடமாடுபவர்களை கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment

Post Bottom Ad