இன்றைய சந்திர கிரகணத்தை இலங்கை மக்களுக்கும் பார்வையிட சந்தர்ப்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

இன்றைய சந்திர கிரகணத்தை இலங்கை மக்களுக்கும் பார்வையிட சந்தர்ப்பம்

புனித வெசாக் நோன்தினமான இன்று (26) அதாவது 2021 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இடம்பெறுகிறது.

இன்று மாலை 6.23 க்கு தென்கிழக்கு வான் பரப்பில் தோன்றும் சந்திர கிரகணத்தை இரவு 7.20 வரை இலங்கையில் பார்வையிட முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் பிரிவின் வானிலை மற்றும் வளிமண்டலவியல் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டின் பின்னர் முதலாவது சந்திர கிரகணம் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். அவுஸ்ரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இது முழுமையான சந்திர கிரகணமாக காட்சியளிக்கும்.

சந்திர கிரகணம் சூரிய ஒளியைதான் நிலவு பிரதிபலிக்கிறது. சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே ஒரே நேர் கோட்டில் பூமி வரும் போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால், சூரிய ஒளி நிலவில் படுவதை பூமி மறைத்து விடுகிறது. பூமியின் நிழல்தான், நிலவில் படுகிறது.

பூமி - நிலவு இடையேயான சராசரி தொலைவானது, 3.84 லட்சம் கி.மீ., விட குறைவாக இருக்கும் போது, 'சூப்பர் மூன்' தோன்றுகிறது. அப்போது, சாதாரணமாக தெரியும் நிலவை விட, 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும், நிலவு தெரியும்.

சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வர, 365.26 நாளாகிறது. நிலவு ஒரு முறை பூமியைச் சுற்ற, 29.32 நாளாகும். இக்கணக்கீட்டு முறையில் பூமியின் ஒரு பக்கம் சூரியனும், மறுபக்கம் நிலவும், ஒரே நேர் கோட்டில் வரும் போது, 'சூப்பர் மூன்' தோன்றுகிறது.

'சூப்பர் மூன்' ஏற்படும் போது, நிலவானது பூமிக்கு அருகில் வருவதால், சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுகிறது. இதனால், அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும். அதனால், 'ஆரஞ்சு' முதல் ரத்த சிவப்பு நிறத்தில் நிலா தெரியும். இது, 'இரத்த நிலா' எனப்படுகிறது.

இந்தியாவில் இன்று மதியம், 3:15 முதல் மாலை, 6:23 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறும். மாலை, 4:39 முதல், 4:58 மணி வரை முழு சந்திர கிரகணம் இருக்கும். 

இந்தியாவில், மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் ஒடிசா, அந்தமான் நிக்கோபர் தீவின் கடலோர பகுதிகளில், பாதி சந்திர கிரகணத்தை பார்க்கலாம். இந்தியாவின் மற்ற பகுதிகளில் கிரகணம், பெரிய நிலா, இரத்த நிலா மூன்றையும் பார்க்கும் வாய்ப்பு இல்லை.

No comments:

Post a Comment