ஆழமாக வேரூன்றிய பிரிவுகளின் முன்னிலையில் கூட, பகிரப்பட்ட அனுபவங்கள் ஒரு சிறந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் கருவியாக இருக்கக்கூடும், மேலும் சமூகத்தை ஒன்றிணைப்பதில் உறுதியான விளைவை ஏற்படுத்தும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் தேர்தலில் போட்டியிடும். டாக்டர் மனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர் தொடரந்து கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்ட இன, மத அல்லது பிற குழுக்களுக்கு மாறாக, தனிநபர்கள் தங்களை ஒட்டுமொத்தமாக ஒரு தேசத்தின் ஒரு பகுதியாகக் கருதும் பொதுவான அடையாளத்தை உருவாக்குவதன் மூலம் சமூகத்தில் இந்த பகிரப்பட்ட அனுபவத்தை உருவாக்க விளையாட்டு, குறிப்பாக கால்பந்தாட்டம் பயன்படுத்தப்படலாம். சர்வதேச சமூகம் இந்த கருத்தைப் புரிந்துகொண்டு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.
4 பில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட கால்பந்தாட்டம் உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டாகவும் மற்றும் நிச்சயமாக பல நூற்றாண்டுகளாக தேசிய அடையாளங்களை பலப்படுத்திய ஒரு விளையாட்டாகவும் காணப்படுகின்றது.
ஆயினும்கூட, இலங்கையில் கால்பந்தாட்டத்திற்கு தேவையான முக்கியத்துவம் இதுவரை கொடுக்கப்படவில்லை, இதனால் உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது விளையாட்டுத் துறையில் பின்தங்கியிருக்கின்றது. அதைத் தொடர்ந்து, இலங்கையில் கால்பந்தாட்டத்தை வளர்ப்பது மிக முக்கியமானது.
அவ்வாறு செய்வதற்கான முதல் படி, நாட்டில் அடிப்படை கால்பந்தாட்டம் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு, விளையாட்டில் ஆர்வத்தையும் திறமையையும் அதிகரிக்க குறிப்பாக நாட்டின் இளைஞர்கள் மற்றும் இளைய மாணவர்கள் மத்தியில் செயல்திறன் திட்டங்களைத் தூண்டுதல் அவசியமாகும்.
நிர்வாகம், போட்டித் திட்டமிடல், இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்பு, டிஜிட்டல் மயமாக்கல், பயிற்றுவிப்பாளர் கல்வி போன்ற முக்கிய துறைகளில் அடிப்படை மற்றும் மாற்றத்தக்க மாற்றங்களின் ஆரம்ப நிலை முயற்சி எங்கள் தாய்நாட்டில் விளையாட்டை உண்மையிலேயே வளர்ப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
மேலதிகமாக, இலங்கையில் விளையாட்டின் உண்மையான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக விளையாட்டு அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுக்குள் ஊடுருவியுள்ள ஊழல் மற்றும் தேவையற்ற அரசியலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எங்கள் சமூகம், குறிப்பாக கால்பந்தாட்ட துறையில் எண்ணற்ற திறமையான இளைஞர்களைக் கொண்டுள்ளது. ஆயினும்கூட, இலங்கையில் பாடசாலைகள் மற்றும் கழகங்ளுக்கு, கால்பந்தாட்டம் தொடர்பாக அதிக வாய்ப்புக்கள் வழங்க முடியாததால், இந்த ஆற்றல் வீணானதாகவும் பயனற்றதாகவும் உள்ளது.
அனைத்து சிறுவர்களும், பாலினம், இனம் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தங்கள் ஆர்வத்தில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பைப் பெற தகுதியானவர்கள். ஆகவே, எப்போதும் விரும்பப்படும் இந்த விளையாட்டில் ஈடுபட எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு போட்டிக்குரிய மற்றும் பொருத்தமான தளத்தை வழங்குவதற்காக ஒரு சமூகமாக, இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டை வளர்ப்பதற்கான பொறுப்பு நம்மிடமுள்ளது.
டாக்டர் மனில் பெர்னாண்டோ முன்வைத்த அறிக்கையான “முதலில் கால்பந்து விளையாடுவோம்”(‘Football First; Let’s play’) என்பதில் கலந்துரையாடப்பட்ட முக்கிய எண்ணக்கருக்கள் மற்றும் திட்டங்கள் இவை. இலங்கையில் கால்பந்தாட்டத்தை வளர்ப்பதில் முடிவில்லாத அர்ப்பணிப்புடன் இருக்கும், டாக்டர் மனில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (SLFF) வரவிருக்கும் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார்.
டாக்டர் மனிலின் தொலைநோக்குப் பார்வை, நோக்கம் மற்றும் இலங்கையில் கால்பந்தாட்டத்தை வளர்ப்பதற்கான செயல் திட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ள, முழு அறிக்கையையும் ‘Football First; Let’s play’ என்ற முகநூல் பக்கத்தில் உள்ளன. வாசிப்பதனூடாக அல்லது காணொளியை பார்ப்பதனூடாக அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment