பல வகை கொரோனா தொற்றுக்கும் தடுப்பூசிகள் பலன் தரும் - ஆய்வு முடிவுகள் கூறுகின்றன - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

பல வகை கொரோனா தொற்றுக்கும் தடுப்பூசிகள் பலன் தரும் - ஆய்வு முடிவுகள் கூறுகின்றன

பல வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கள் காணப்பட்டாலும், அனைத்துக்கும் தடுப்பூசிகள் பலன் தரும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் உருவானது. ஆனால் இது தொடர்ந்து உருமாறி புதிய வகை கொரோனாக்களாக பரவுகின்றன.

அந்த வகையில் உருமாறிய கொரோனாக்கள் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் பி117, தென் ஆப்பிரிக்காவில் பி1351, பிரேசிலில் பி1, இந்தியாவில் பி16172 கொரோனாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த உருமாறிய கொரோனாக்கள் அனைத்தும் அதிவேக பரவும் திறனைக் கொண்டுள்ளன.

இப்படி பல வகை கொரோனாக்கள் கண்டறியப்பட்டாலும் அவை அனைத்துக்கும் எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்கும் என தெரியவந்துள்ளது.

கத்தார் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, பி117 வகை கொரோனாவுக்கு எதிராக பைசர், பயோ என்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசி 90 சதவீத செயல்திறனைக் கொண்டிருப்பதாக கூறுகிறது.

பைசர், பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசியும், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியும் பி16172 வகை கொரோனாவுக்கு எதிராக முறையே 88 சதவீதம், 60 சதவீதம் செயல்திறனைக் கொண்டுள்ளன என இங்கிலாந்து சுகாதார துறை ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இந்த பகுப்பாய்வுகள், தொற்று நோய்க்கான ஆபத்துடன் தொடர்பு உடையவை ஆகும். இருப்பினும், ஒரு தடுப்பூசி மூலம் மாறுபடும் சாத்தியக் கூறுகள் வரும்போது, மிக முக்கியமாக எழுகிற கேள்வி- யாரோ ஒருவர் பாதிக்கப்படுகிறாரா என்பதல்ல, அந்த தொற்று கடுமையான நோய்த் தாக்குதல் அல்லது மரணத்துக்கு வழிநடத்துகிறதா என்பதுதான்.

தடுப்பூசியின் வேலை, கடுமையான நோய்த் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதாகும். இதுவரை கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள முக்கிய தடுப்பூசிகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட கொரோனாவுக்கு எதிராக செயல்படுகிற வேலையைச் செய்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad