ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிதியமைச்சர் என்ற வகையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநராக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதன் ஆளுநர்களில் ஒருவராக அங்கம் வகிக்கின்றார்.
அந்த வகையில், இன்று (05) பிற்பகல் வீடியோ தொழில்நட்பம் மூலம் இடம்பெற்ற குறித்த ஆளுநர்கள் சபையின் 54ஆவது கூட்டத்தில், 2021/2022ஆம் ஆண்டுக்கான தலைவராக, பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த கூட்டம் ஜோர்ஜியாவின், திபிலிசி நகரில் இடம்பெற திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது நிலவும் கொவிட்-19 பரவல் நிலை காரணமாக, வீடியோ தொழில்நுட்பத்தில் இடம்பெற்றிருந்துமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment