மக்களே அவதானம் ; நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு! - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

மக்களே அவதானம் ; நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

சீரற்ற வானிலை காரணமாக ஐந்து நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அதிக மழை காரணமாக நோட்டன் பிரிட்ஜ், கெனியன், குக்குலே கங்கை மற்றும் உடவலவ நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தெதுறூ ஓயாவின் நான்கு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

இதனால் குறித்த நீர்த் தேக்கங்களை அண்மித்த மற்றும் தாழ்வான நிலப்பகுதியில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment