நந்திகிராம் தொகுதியில் திருப்பம்...! சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார் மம்தா பானர்ஜி...! நீதிமன்றத்தை நாடப்போவதாக அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 2, 2021

நந்திகிராம் தொகுதியில் திருப்பம்...! சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார் மம்தா பானர்ஜி...! நீதிமன்றத்தை நாடப்போவதாக அறிவிப்பு

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வேற்றி பெற்றதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது தோல்வி என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. 

இருப்பினும் அம்மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்தி கிராமம் என்ற தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா பானர்ஜி போட்டியிட்டார். 

அவர் காலையில் பின்னடைவில் இருந்த நிலையில் மதியத்திற்கு மேல் முன்னிலை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, அவர் வெற்றி பெற்றுவிட்டதாக மாலையில் செய்திகள் வெளியானது. 

இந்த நிலையில், தற்போது, மம்தா பானர்ஜி தோல்வி அடைந்ததாகவும் நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மம்தா பானர்ஜி 1600 + வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா, நந்திகிராமைப் பற்றி கவலைப்பட வேண்டாம், போராட்டத்திற்காக நீங்கள் ஏதாவது தியாகம் செய்ய வேண்டும். நான் ஒரு இயக்கத்தை எதிர்த்துப் போராடியதால் நந்திகிராமுக்காகப் போராடினேன். அது பரவாயில்லை. நந்திகிராம் மக்கள் எதை வேண்டுமானாலும் தீர்ப்பளிக்கட்டும், நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் நீதிமன்றத்தை நாடுவேன், ஏனெனில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சில கையாளுதல்கள் செய்யப்பட்டன, அவற்றை நான் வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment