மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி

மே 23 முதல் ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு குறுகிய தொடரில் பங்கெடுக்க இலங்கை அணி பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மே 16 ஆம் திகதி டாக்காவுக்கு புறப்படும் இலங்கை அணி, குறுகிய தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மே 21 ஆம் திகதி பயிற்சி போட்டிகளில் பங்கெடுக்கும்.

அதன் பின்னர் மே 23, 25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் மீர்பூரில் உள்ள ஷெர்-இ-பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை பங்களாதேஷுடன் பலப்பரீட்சை நடத்தும்.

இந்த சுற்றுப் பயணத்தினால் கொவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இரண்டாவது வெளிநாட்டு அணியாக இலங்கை இருக்கும்.

டாக்கா மற்றும் சட்டோகிராமில் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக மேற்கிந்திய தீவுகள் கடந்த ஜனவரி-பெப்ரவரி மாதங்களில் பங்களாஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment