மின்சார சபை ஊழியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவையாளர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 4, 2021

மின்சார சபை ஊழியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவையாளர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்குவதில் மின்சார சபை ஊழியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே, மின்சார சபை ஊழியர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

மின்சார சபை ஊழியர்களில் பலர் கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமலிருந்தால் தங்குதடையின்றி மின்சார விநியோகத்தை வழங்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டிள்ளார்.

இதனை கவகத்திற் கொண்ட ஜனாதிபதி, மின்சார சபை ஊழியர்கள் உள்ளிட்ட அத்தியவசிய சேவையாளர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்குவதன் முன்னிரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment