கராச்சி - ஷிகார்பூர் துப்பாக்கி சூட்டு சம்பவம் : பழங்குடியினரின் தலைவர் தேகோ கான் தெகானி கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

கராச்சி - ஷிகார்பூர் துப்பாக்கி சூட்டு சம்பவம் : பழங்குடியினரின் தலைவர் தேகோ கான் தெகானி கைது

கராச்சி - ஷிகார்பூர் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் தெகானி பழங்குடியினரின் தலைவரான தேகோ கான் தெகானியையும் அவரது மகன்களையும் ஏனைய சகாக்களையும் சிந்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிந்து - ஷிகார்பூர் மாவட்டத்தின் கான்பூரில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் டகோயிட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் இரண்டு பொலிசார் உயிரிழந்ததுடன் நான்கு பேர் காயமடைந்தனர்.

போராளிகள் கடுமையான ஆயுதங்களை கொண்ட பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதன் விளைவாகவே உயிரிழப்புகள் ஏற்பட்டது. எவ்வாறாயினும் பொலிசாரின் பதில் தாக்குதலில் ஆறு டாக்கோட் போராளிகள் உயிரிழந்துள்ளதாக கராச்சி செய்திகள் உறுதிப்படுத்தின.

ஷிகாபூரின் - காரி தேகோ பகுதியில் தொடர்ந்தும் பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் கைதாகியுள்ள தேகோ கான் தெகானி இப்பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக கருதப்படுகிறார். 

உள்ளூர் அரசியல் தலைமையின் உத்தரவின் பேரில் குற்றவாளிகளுடனான தொடர்பை புறக்கணித்து அவருக்கு சமாதான விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அவரது செல்வாக்கை அறிய முடியும்.

இதற்கிடையில், ஷிகார்பூர் மாவட்டத்தின் கான்பூரில் ஆற்றங்கரை பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிந்து முதலமைச்சர் முராத் அலி ஷா பெரும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் டகோயிட் போராளிகளுக்கும் பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் பின்னர் இந்த நடவடிக்கை விரைவில் நிறுத்தப்பட்டது. ஆனால் பாதுகாப்பு தரப்பினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ள நிலையில் விரைவில் நடவடிக்கை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad